Home செய்திகள் எந்த மருத்துவரும் தொற்று ஏற்படுத்தும் நோயாளியை குற்றம் சாட்டியது இல்லை; ஏன்?அது தான் எங்களுக்கும் மயானத்தில் இடம் தர மறுத்த உங்களுக்கும் உள்ள வித்தியாசம்:-DR பிரகாஷ் வேதனை..

எந்த மருத்துவரும் தொற்று ஏற்படுத்தும் நோயாளியை குற்றம் சாட்டியது இல்லை; ஏன்?அது தான் எங்களுக்கும் மயானத்தில் இடம் தர மறுத்த உங்களுக்கும் உள்ள வித்தியாசம்:-DR பிரகாஷ் வேதனை..

by Askar

நுரையீரல் முழுவதும் சீழ் பிடித்து , அதை ஊசி மூலம் எடுக்க முடியாததால் அறுவை சிகிச்சை நிபுணர் என்னை அழைத்தனர்.

காச நோயாளியான தனது தாத்தா மூலம் இந்த குழந்தைக்கு கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது.

கண்டிப்பாக அந்த சீழில் காச நோய் கிருமி இருக்கும்,

இதற்கு தீர்வு icd எனப்படும் சிகிச்சை தான் விலா எலும்புக்கு நடுவில் பிளாஸ்டிக் tube மூலமாக அந்த சீழை எடுக்க வேண்டும்.

“என் மூஞ்சில இருமிடாத பாப்பா “னு சொல்லிவிட்டு

Procedure ஆரம்பித்தேன்..

Tube நுரையீரல் அருகில் சென்றதும்..

துர்நாற்றமும் , சலமும் என் மீதும் செவிலியர் மீதும் தெறித்தது .

துர்நாற்றத்தில் மூச்சுவிட முடியவில்லை , கண்டிப்பாக அதில் காச நோய் கிருமி இருக்கும்.

பிறகு tube வழியாக சீழ் வடிய தொடங்கியது..

வடிந்த சீழை ஒரு ஊசியில் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார் பயிற்சி மருத்துவர்.

மாஸ்க்கை கழட்டிவிட்டு முகத்தை கழுவி விட்டு மற்ற வேலைகளை பார்த்தேன்.

வீடு வரும் வரை காச நோய் தொற்று ஏற்பட்டு, 9 மாதங்கள் டிபி மாத்திரை சாப்பிட்ட மருத்துவ நண்பனின் ஞாபகம் வந்து போனது.

ஏதோ கொரோனா என்ற கிருமி வந்த பிறகு தான் எங்களுக்கு infection வருகிறது என்று இல்லை..

காலம் முழுவதும் கால்களை சுற்றிய பாம்பாக பல கிருமி தொற்று ஆபத்து எங்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

காச நோய் முதல் எய்ட்ஸ் வரை நோயாளி யிடம் இருந்து வருடம் முழுவதும் பரிசாக பெற்று கொண்டு தான் இருக்கிறோம்.

இதில் லேட்டஸ்ட் addition கொரோனா , அவ்வளவு தான்.

எந்த மருத்துவரும் infection கொடுத்த நோயாளியை குற்றம் சாட்டியது இல்லை.

ஏன்?

அது தான் எங்களுக்கும் மயானத்தில் இடம் தர மறுத்த உங்களுக்கும் உள்ள வித்தியாசம்!

டாக்டர். பிரகாஷ், தஞ்சாவூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!