Home செய்திகள் மதுரை ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருள் சோதனை… கலவரமாக வெடித்தது…கைதிகளுக்கிடையே மோதல்..

மதுரை ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருள் சோதனை… கலவரமாக வெடித்தது…கைதிகளுக்கிடையே மோதல்..

by ஆசிரியர்

மதுரை மத்திய ஜெயிலில் சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா தலைமையில் போலீசார் இன்று 23/04/2019 மாலை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கைதிகள் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பிடிபட்டன. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் போலீசாரை கீழே பிடித்து தள்ளியதாக தெரிகிறது.

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இரண்டு கைதிகளையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது சிறையில் இருந்த மற்ற கைதிகள் அந்த இரண்டு பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதனால் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது .இதையடுத்து கைதிகள் சிறையில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். சிறை வளாகத்தில் உள்ள மரங்களில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. அப்போது கைதிகள் பலரும் கற்களை வீசி போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது சிறைத்துறை அதிகாரிகளை தாக்கியது அப்பள ராஜா கும்பலைச் சேர்ந்த இரண்டு கைதிகள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!