Home செய்திகள்கீழக்கரை செய்திகள் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த திண்டுக்கல் காவல்துறை..

குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த திண்டுக்கல் காவல்துறை..

by ஆசிரியர்

திண்டுக்கல் விவேகானந்தா நகர் ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து கடந்த 23/03/ 2019 அன்று கொள்ளையடித்த கும்பலை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்படி நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் ஆய்வாளர் உலகநாதன் சார்பு ஆய்வாளர்கள் பாட்ஷா, சுந்தரேஸ்வரர் குற்றப்பிரிவு போலீசார் CCTV காட்சிகளை ஆராய்ந்து, மற்றும் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் பஸ் நிலையம் பாலாஜிபவன் அருகில் ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த லிங்கையாராயபட்டி(43) லட்சுமண ராவ் (42) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்த நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம், ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!