Home செய்திகள் அரியமானில் மாபெரும் கடற்கரை திருவிழா !  பொதுமக்கள் பங்கேற்று மகிழ்ந்திட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் !! 

அரியமானில் மாபெரும் கடற்கரை திருவிழா !  பொதுமக்கள் பங்கேற்று மகிழ்ந்திட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் !! 

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அரியமான் கடற்கரையில் இன்று (15.06.2024) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் கடற்கரை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இவ்விழா இன்று துவங்கி 17.06.2024 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் கடற்கரை கைப்பந்து போட்டிகள், கால்பந்து போட்டிகள், இரவு மின்னொளி விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், வகை வகையான உணவு கூடாரங்கள், படகு சவாரி, டிஜே மியூசிக், தண்ணீர் விளையாட்டுகள் போன்ற எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் இன்று 15.06.2024, 16.06.2024, 17.06.2024 ஆகிய 3 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்திட மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!