Home செய்திகள் ராமநாதபுரத்தில் சி ஐ டி யு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

ராமநாதபுரத்தில் சி ஐ டி யு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

by Baker BAker

ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை முன்பாக 200க்கும் மேற்பட்ட சி ஐ டி யு போக்குவரத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் காலிப் பணியிடங்களை நிரந்தர பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்றும் , 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், 01.04.2023 க்கு பிறகு பணியில் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் , ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஒப்பந்த முறைப்படி ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்றும், காலிப் பணியிடங்களை நிரந்தர பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றும், சமூக நீதிக்கு எதிரான கான்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும் என்றும், இறந்து போன போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், ஓய்வூதியதாரர்களுக்கு பிற துறை ஊழியர்களைப் போல காப்பீட்டு உத்திரவாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி மண்டல டி.என்.எஸ்.டி.சி- சிஐடியு தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9 மணிக்கு வங்கி நாளை காலை 9 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!