Home செய்திகள் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம் !

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம் !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடக்கமாகி உள்ளனார் .இந்த தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் திருவிழா பெரும் விமர்சியாக நடைபெற்று வரும். இந்த வருடத்தின் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக மே 9ல் தொடங்குகிறது இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் இருந்து தர்ஹா ஹக்தார்களால் மவ்லிது ஷரீப் (புகழ்மாலை) தொடங்கப்பட்டு 23 நாட்களுக்கு ஓதப்படும். அதனைத் தொடர்ந்து மே 19-ம் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானை மேல் வைத்து ஊர்வலம் ஆக எடுத்துவரப்பட்டு சிறப்புமிகு கொடியேற்றமும் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா ஜூன் 31-ம் தேதி மாலை தொடங்கி ஜூன் 1-ம் தேதி அதிகாலை மேலதான முழங்க யானைகள் அணிவிக்க, நாட்டிய குதிரைகள் நாட்டிய மாட, சந்தனக்கூடு பவனி வர, அனைத்து சமுதாயத்தினரும் அணிவகுக்க, புனித மக்பராவில் சந்தனம் பூசப்படும். இதனை தொடர்ந்து ஜுன் 7-ம் தேதி நிறைவு நிகழ்ச்சியான அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அன்று இரவு 7.00மணிக்கு தப்ரூக் எனும் நெய் சோறு வழங்கப்படும். 850வது சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க நிகழ்ச்சி நிறைவு பெறும். இதை தர்ஹா கமிட்டினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!