Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை, இராமநாதபுரத்தில் பாராளுமன்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

மதுரை, இராமநாதபுரத்தில் பாராளுமன்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

by ஆசிரியர்

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர் ராஜ் சத்யன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான, நடராஜன் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக பனகல் ரோட்டில் இருந்து  திறந்த ஜீப்பில் சென்ற வேட்பாளர் ராஜ் சத்யனை கோரிப்பாளையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை திரண்டு இருந்த ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள்  வேட்பாளர் ராஜ் சத்யனை வரவேற்றனர். இதனால் கோரிப்பாளையம் பகுதி முழுவதும் திருவிழா போல் காட்சி அளித்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜன் செல்லப்பா, சரவணன், பெரிய புல்லான் என்ற செல்வம், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்பட ஏராளமானோர் அவருடன் சென்றனர்.

பாஜ., முஸ்லிம் லீக், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் உள்பட 10 பேர் வேட்பு தாக்கல்..

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு 18/3/19ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 19 ல் தொடங்கியது. மார்ச் 22 வரை 5 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதிமுக., கூட்டணியில் போட்டியிடும் பாஜ., வேட்பாளர் தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் தாக்கல் செய்தார். அவருடன் அ.அன்வர் ராஜா எம்.பி., அதிமுக., மாவட்ட அவைத் தலைவர் செ.முருகேசன், பாஜ மாநில துணைத் தலைவர்கள் சுப.நாகராஜன், து.குப்பு ராமு ஆகியோர் உடனிருந்தனர்.

திமுக., கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கடையநல்லூர் எம்எல்ஏ., அபுபக்கர், திமுக., மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் கே.பஞ்சாட்சரம் தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீரராகவ ராவிடம் மனுத் தாக்கல் செய்தார். மாவட்ட தலைவர் கோவிந்தன், மாவட்ட துணைத் தலைவர் கார்மேகம், மாவட்ட செயலர் மாரி, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

சுயேட்சைகள் முத்து, ஜெயபாண்டி, கருப்பசாமி, அசன் அலி, கேசவ் யாதவ், ஜவாஹிர் அலி, கருப்பசாமி என 10 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ் மற்றும் இராமநாதபுரம் முருகன்..

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!