Home செய்திகள் காற்றில் பறக்கும் தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு; காய்கறி விற்பனைக் கடைகளை கண்காணிக்காத பாப்பாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகம். முக கவசம் அணியாமல் காய்கறி விற்பனை..

காற்றில் பறக்கும் தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு; காய்கறி விற்பனைக் கடைகளை கண்காணிக்காத பாப்பாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகம். முக கவசம் அணியாமல் காய்கறி விற்பனை..

by Askar

தர்மபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. சாலைகளில் செல்பவர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வருபவர்கள் முக கவசம் இல்லாமல் வரக்கூடாது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தர்மபுரி பாப்பாரப்பட்டி பேரூராட்சி காய்கறி விற்பனை சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்பவர்கள் முக கவசம் அணியாமல் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று பாப்பாரப்பட்டி பேரூராட்சி ஆங்காங்கு ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகளை கண்டுகொள்வதில்லை.சென்ற வாரம் கரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக டிரோன்  கேமரா பயன்படுத்தி காய்கறி விற்பனை சந்தையை காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய பேரூராட்சி அதிகாரிகள் தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல்  ஊடகத்தில் செய்தி வரவேண்டும் என்பதற்காக ஒரு நாள் மட்டும் கண்காணித்து விட்டு தற்போது கண்காணிப்பதை மறந்துவிட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர்  முகக் கவசம் அணியாமல் காய்கறி விற்பனை செய்பவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com