Home செய்திகள் பாப்பாரப்பட்டியில் இந்தியன் வங்கிக்காக கூட்டமாக அதிகாலையிலிருந்து வங்கியின் முன்புறத்தில் அமைந்திருக்கும் பொதுமக்கள்…

பாப்பாரப்பட்டியில் இந்தியன் வங்கிக்காக கூட்டமாக அதிகாலையிலிருந்து வங்கியின் முன்புறத்தில் அமைந்திருக்கும் பொதுமக்கள்…

by Askar

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இந்தியன் வங்கியில் தினந்தோறும் பொதுமக்கள் அன்றாட தேவைக்காக பணம் எடுக்கவோ அல்லது போடவும் வங்கிக்கு வருகின்றனர். இன்று பாப்பாரப்பட்டியில் வாரசந்தை நடைபெறுவதால் அதிகாலை முதலே இந்தியன் வங்கிக்கு வந்த கிராம மக்கள் வெளியில் சமூக இடைவெளி விட்டு ஒருவர் பின்பு ஒருவர் நிற்காமல் விதிமுறைகளை பயன்படுத்தாமல் கூட்டமாக வங்கியின் உள்புறத்தில் அமர்ந்து இருப்பதே படத்தில் காணலாம் .பாப்பாரப்பட்டிபேரூராட்சி அலுவலர் அவர்கள் மக்களுக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு குறித்து ஒலிபெருக்கி மூலம் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் .இதனால் குக்கிராமத்தில் இருந்து வரும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கியில் வருவது ஓசை அவர்கள் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுகிறார்கள். பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலர் விஜய சங்கர் அவர்கள் அதிகாலையில் மக்கள் தினந்தோறும் டவுனுக்கு காலை நேரங்களில் மட்டும்தான் வருகின்றனர் . இதனால் மக்கள் கூட்டமாக  இருக்கும் இடத்தில் சந்தித்து கொரோனா வைரஸ் தடுக்க செய்முறை மூலம் அவர்களுக்கு நேரில் விழிப்புணர்வு செய்தால் மட்டுமே குக்கிராமத்தில் இருந்து வரும் பொது மக்களுக்கு தெளிவாக புரியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். தருமபுரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத கொரோனா வைரஸ் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தர்மபுரி பொதுமக்களுக்கு மீண்டும் யாருக்கும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் அந்தந்த பேரூராட்சி தாலுக்கா அதிகாரிகள் மக்கள் காலையில் நேரத்தில் மட்டுமே தங்களின் தேவைக்காக டவுனுக்கு வருகின்றனர். இதனால் மக்கள் டவுனுக்கு வரும் நேரங்களில் அந்தந்த தாலுகா அதிகாரிகள் பொதுமக்களிடம் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாள் மட்டுமே மீண்டும் கொரோனா வைரஸ்  தருமபுரியில் அதிகம் பரவாமல் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com