Home செய்திகள் தஞ்சையில் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் வழங்கும் விழா !

தஞ்சையில் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் வழங்கும் விழா !

by Baker BAker

தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் திருச்சி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் , திருச்சி கே கே நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை அலுவலகம் , கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் முதல்கட்டமாக தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன . இதற்கான தொடக்க விழா திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது . இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி, ரிப்பன் வெட்டி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை பெண் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார் . திருச்சி மாநகரில் மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் காவலர்கள் , மாநகர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் , மாநகர காவல் ஆணையகரத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் , ஆயுதப்படை வளாகத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் , மகளிர் காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பெண்கள் ஆகியோரின் நலன் கருதி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம் பெண்கள் ஓய்வறையில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் , 5 ரூபாய் நாணயத்தை பயன்படுத்தி சானிடரி நாப்கின் பெற்றுக்கொள்ளலாம் என்றும் காவல் ஆணையர் காமினி தெரிவித்தார் . இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில் பணிபுரியும் மகளிருக்கு ஏற்படும் மாத சுழற்சியின் போது அவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தை ஒவ்வொரு பிரிவாக பொருத்தி வருகிறோம் . ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் , மாவட்ட காவல் அலுவலகம் , ஆயுதப்படை வளாகம் , போக்குவரத்து ஒழுங்குபிரிவு அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் , சென்னை திருவல்லிக்கேணியில் அரசு மகளிர் பள்ளியிலும் இந்த இயந்திரங்களை பொருத்தியுள்ளோம் . தற்போது திருச்சியில் முதல்கட்டமாக நாகு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன , வரவேற்ப்பை பொருத்து அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த இயந்திரம் விரைவில் பொருத்தப்படும் என்றனர் . திருச்சி மாநகர ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார் , மாநகர ஆயுதப்படை ஆய்வாளர் எம்,ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர் . இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!