Home செய்திகள் எனக்கு உயிர் முக்கியம் இல்லை, பைக் தான் முக்கியம். வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்:நடு ரோட்டில் தீக்குளித்து இறந்த வாலிபர்…

எனக்கு உயிர் முக்கியம் இல்லை, பைக் தான் முக்கியம். வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்:நடு ரோட்டில் தீக்குளித்து இறந்த வாலிபர்…

by Askar

கேரள மாநிலம் மூணாறு அருகே காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், இளைஞர் ஒருவர் சாலையிலேயே தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடெங்கும் 144-தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு இன்றி யாரும் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் துறையினரும் இரவு பகல் பாராமல் மக்களின் உயிர்காக்க ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகிறனர். இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அடுத்துள்ள சூரியநெல்லி பகுதியில் விஜி என்பவருடைய மகன் விஜய பிரகாஷ் (24) கட்டிட தொழிலாளி என்பவர் கடந்த 4,5 நாட்களாக தனது இரு சக்கர வாகனத்தில் 144 தடை உத்தரவை மதிக்காமல் சூரியநெல்லி நகர் பகுதியில் அங்கும் இங்குமாக தேவையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சாந்தம்பாறை காவல்துறையினர் எச்சரித்துள்ளர்.

இதை பொருட்படுத்தாத விஜய பிரகாஷ் மீண்டும் சுற்றிதிரிய காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த விஜய பிரகாஷ் டீசலை தன் மீது ஊற்றிக் கொண்டு என் பைக்கை தராவிட்டால் காவல்துறையினரையும் கொழுத்தி தானும் கொழுத்தி கொள்வேன் என கூறிக்கொண்டு அப்பகுதியில் ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் திடீரென தன்னை தானே கொளுத்தி கொண்டு சூரியநெல்லி டவுன் பகுதியில் நடு ரோட்டில் நடந்து வந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றியும் துணிகளை கொண்டும் தீயை அணைத்தனர். அதற்குள் அவரது உடலில் தீ காயங்கள் ஏற்படவே அவர் மயங்கி விடவே அவரை கோட்டயம் மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சாந்தம் பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com