நீச்சலில் உலக சாதனை படைத்த நாகை மாணவர்…

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள E.G.S.பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவர் சபரிநாதன். இவர் சிறுவயது முதலே இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பல்வேறுபட்ட நீச்சல் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கமும் வெள்ளியும் ஆக இதுவரை அறுநூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று எடுத்துள்ளார்.

இவர் தற்போது நாகூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான ஐந்து கிலோமீட்டர் தூரமுள்ள கடற்கரையை வித்தியாசமான முறையில் நீந்திக் கடந்து வில் மெடல்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்தார். அவர் தன்னுடைய இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் இரும்பு சங்கிலியால் கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டர் தொலைவு வரை இரண்டு மணி நேரம் இறுபது நிமிடம் நாற்பத்தெட்டு நொடிகளில் கடந்து சாதனை புரிந்துள்ளார். இதனுடைய சாதனைச் சான்றிதழ் வழங்கும் விழா E.G.S.பிள்ளை பொறியியல் கல்லூரி கலையரங்கில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் வில் மெடல்ஸ் சார்பாக நிறுவனர் தலைவர் கலைவாணி முதன்மைச் செயலர் தஹ்மிதா பானு ஒருங்கிணைப்பாளர் முகமது ரியாஸ்தீன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவருக்கு வில் மெடல்ஸ் உலக சாதனை, வில் மெடல்ஸ் தேசிய சாதனை, வில் மாநில சாதனை ஆகியவற்றிற்கான அங்கீகாரச் சான்றிதழை வழங்கினார்கள்.

#Paid Promotion