Home செய்திகள் திருச்சியில் உலகப் பணத்தாள்கள் கண்காட்சி…

திருச்சியில் உலகப் பணத்தாள்கள் கண்காட்சி…

by ஆசிரியர்

திருச்சியில் உலகப் பணத்தாள்கள் கண்காட்சி ஜீலை 13, 14, 15 தேதிகளில் நடைபெறுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உலகப் பணத்தாள்கள் வரலாற்றினை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் உலகப் பணத்தாள்கள் , நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் பழம் பொருட்கள் கண்காட்சியினை திருச்சி மத்திய பேருந்து நிலையம், பெமினா ஹோட்டல் அருகே உள்ள ஸ்ரீநிவாசா ஹாலில் 2018 ஜுலை 13,14 & 15 தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.

கண்காட்சியில் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் காலத்து காசுகளும், அர்ஜென்டினா, அர்மேனியா, ஆஸ்டிரியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பல்கேரியா, பஹ்ரைன், புரூனே, போஸ்னியா , பகாமாஸ், பங்களாதேஷ், பூட்டான், பெல்ஜியம் , பிரேசில், பர்படாஸ், செக்கோஸ்லோவாகியா, கேமன் தீவு, சைனா, கேப் வெர்டி, கனடா, சைப்ரஸ், கோஸ்டோரிகா, செக் குடியரசு , டென்மார்க், கிழக்கு கரீபியன் தீவு, இங்கிலாந்து, ஜெர்மணி, எத்தியோப்பியா, எகிப்து, பல்க் தீவு, பின்லாந்து, பிரான்ஸ், பிஜு தீவு, கேம்பியா, கிரீஸ், ஜெர்சினி, ஹாங்காங், ஹோண்டுராஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இந்தோனேசியா, ஈராக், இஸ்ரேல், இத்தாலி, ஈரான், ஐஸ்லாந்து, ஜப்பான் , ஜமைக்கா , ஜோர்டான், ஜெர்சி, கஜஹஸ்திஸ்தான், குவைத் , லெபனான், லித்துவேனியா , முராக்கோ, மெக்சிகோ, மாலதீவு, மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, ஓமன், போர்ச்சிகல், பனாமா , பிலிப்பைன்ஸ், கத்தார், ரஷ்யா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, சிரியா, தாய்லாந்து, உகாண்டா உள்ளிட்ட 200 உலக நாடுகளின் பணத்தாள்கள் , நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அதன் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாராம் குறித்து எடுத்து கூறுகிறார்கள்.

நாணயக் கண்காட்சியில் பிரிட்டிஷ் இந்தியா நாணயங்களில் வில்லியம் IV (1830-1837) , ராணி விட்டோரியா (1834-1901) , எட்வர்டு VII (1901-1910), ஜார்ஜ் V (1911-1936) , ஜார்ஜ் V1 (1936- 1947), உள்ளிட்ட ஆண்டுகளில் வெளியான 1 | 12, 1/2 , 1, 2, 4,8 அணா, பைஸ், காலணா, ஓட்டை ஒரு பைசா, அரையனா உள்ளிட்ட மதிப்பிலான செம்பு, வெள்ளி, பித்தளை, நிக்கல் உள்ளிட்ட உலோகங்களில் வட்டம், சதுரம், அறுகோண வடிவங்களில் உள்ள நாணயங்கள் காட்சி படுத்தப்படுகின்றன. குடியரசு இந்தியா பொது பயன்பாடு நானயங்களும், நினைவார்த்த நாணயங்களும் காட்சிப்படுத்தப் படுகின்றன.சேகரிப்பு பொருட்களுக்கான அரங்குகளும் இடம் பெறுகின்றன. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகர், பொருளர் அப்துல்அஜீஸ், முகமது சுபேர், பாண்டி, கமலக்கண்ணன், சந்திரசேகரன் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி, ஆய்வு மாணவர்கள், பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழம் பொருட்கள் சேகரிப்போர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நிகழ்வில் பங்கேற்கிறார்கள். உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழங்காலப் பொருட்கள் சேகரிப்பாளர்கள் தங்களது சேகரிப்பினை காட்சிப்படுத்தி விளக்குகிறார்கள். மேலும் விவரங்களுக்கு P. விஜயகுமார், தலைவர் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம். 98424 12247 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com