Home செய்திகள் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்…

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் வட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற  சுருக்கத்திருத்த சிறப்பு முகாம்களை  மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஆய்வு செய்தார்.  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில்  இன்று (24.02.2019) மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்திட நடைபெற்ற சிறப்பு முகாம்களை ஆய்வு செய்தார்.

இந்தியத் தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி 01.01.2019-ஆம் நாளை தகுதி  நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த 31.01.2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. இப்பட்டியலின்படிமாவட்டத்தில் 5,60,173 ஆண் வாக்காளர்கள், 5,62,347 பெண் வாக்காளர்கள், 69 மூன்றாம் பாலின வாக்காளர்கள் 11,22,589  வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களை தங்களது பெயர்களை சேர்க்க வசதியாக பெயர் திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய மாவட்டத்தில் உள்ள  4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,367 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று (23.02.2019) மற்றும் இன்று (24.02.2019) சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் பரமக்குடி வருவாய் வட்டத்திற்குட்பட்ட சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர்  கொ.வீர ராகவ ராவ்ஆய்வு செய்தார். ஆய்வையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர்  வீரராகவ ராவ் தெரிவிக்கையில் மாவட்டத்தில் உள்ள 1,367 வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றைய (24.02.19) தினம்  சுருக்கத்திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாம்களில் முதன்முறையாக பெயர் சேர்க்க படிவம்-6, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம்.6, பெயர் நீக்கம் செய்ய-படிவம்-7, பெயர், வயது, பாலினம்,உறவு முறை முதலிய  பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய படிவம்-8ம், ஒரு சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம்-8 உள்ளிட்ட படிவங்கள்  மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.  நேற்று (23.02.19) மற்றும் இன்று (24.02.19) நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் மக்களிடமிருந்து 6,089 எண்ணிக்கையில் படிவம்-6, 1,012 எண்ணிக்கையில் படிவம்-7 791 எண்ணிக்கையில் படிவம்-8, 488 எண்ணிக்கையில் படிவம்-8 பெறப்பட்டுள்ளன.

மேலும் இச்சிறப்பு முகாம்களை தவிர்த்து வாக்காளர் சுருக்கத் திருத்தத்திற்கு அந்தந்த உதவி  வாக்குப்பதிவு அலுவலர்களான வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களில்  பொதுமக்கள் படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவித்தார். பரமக்குடி வருவாய் வட்டாட்சியர் பரமசிவம் உடனிருந்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com