Home செய்திகள் 42 நாட்களாக அன்னமிட்ட, மாப்பிள்ளை விநாயகர் கோவில் ராமராஜ் தலைமையிலான நண்பர்கள் குழுவினருக்கு குவியும் வாழ்த்துக்கள்.. 

42 நாட்களாக அன்னமிட்ட, மாப்பிள்ளை விநாயகர் கோவில் ராமராஜ் தலைமையிலான நண்பர்கள் குழுவினருக்கு குவியும் வாழ்த்துக்கள்.. 

by Askar

42 நாட்களாக அன்னமிட்ட, மாப்பிள்ளை விநாயகர் கோவில் ராமராஜ் தலைமையிலான நண்பர்கள் குழுவினருக்கு குவியும் வாழ்த்துக்கள்..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 42 நாட்களாக உணவு தயாரித்து வழங்கிய மாப்பிள்ளை விநாயகர் கோவில் ராமராஜ் தலைமையிலான நண்பர்கள் குழுவினரை மாவட்ட காவல்துறையினர், வருவாய்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

கொரானா பாதிப்பினால் உலகமே பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. தமிழகத்திலும் இந்த நோய்த் தொற்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள், கொரானாவின் கொடூரத் தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு, இலவச உணவு, மருத்துவ வசதி, பொருளுதவி போன்றவற்றை வழங்கி வந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் குழுவினர் அதன் தலைவர் ராமராஜ் தலைமையில், கடந்த 42 நாட்களாக தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கானஉணவு தயாரித்து கொடுத்தனர். மேலும் பல்வேறு தரப்பினரின் உதவியுடன் மருத்துவ வசதிகள், பொருளுதவிகள் போன்றவற்றை வழங்கினர்.

நாளொன்றுக்கு 3ஆயிரம் போருக்கு உதவிகள் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது…

இந்த சேவையை பாராட்டி, இந்த குழுவினரை மாவட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன், உட்பட பலர் நேரடியாக சென்று பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் இந்த குழுவினரின் சேவையை பாராட்டி மாவட்ட வழங்கல் அதிகாரி நேரடியாக சென்று .. மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் குழுவினர் அனைவருக்கும், வேஷ்டி, சேலை, சால்வைகளை வழங்கி பாராட்டினார்.

மேலும், இந்த குழுவினரை, ராஜபாளையம் டி.எஸ்.பி. நாகசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், மாரியப்பன், நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள், நகராட்சி மருத்துவர் சரோஜா, மற்றும் போலீசார், போக்குவரத்து காவலர்கள், தீயணைப்பு துறையினர் நேரில் பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com