திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாய்க்கன்பட்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்விழாநேற்றுகொண்டாடப்பட்டது.கெஜல்நாய்க்கன்பட்டியில் தேர்தல் நடத்தை விதியின்படி அங்குள்ள எம்ஜிஆர் சிலையை வருவாய்துறையினர் துணி மூடிகட்டி இருந்தனர்.தேர்தல் விதிகளை மீறி அப்பகுதி திமுகவினர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.வெடித்த பட்டாசிலிருந்து தீ பொறி பறந்து எம்ஜிஆர் சிலைமேல் போர்த்தப்பட்டு இருந்த துணிமேல் பட்டுதுணி தீ பற்றி எரிந்தது.உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். சிலையும் சிறிதளவு சேதம் அடைந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் ஆத்திரமடைந்து சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.விரைந்து வந்த காவல்துறையினர் இரு கட்சியினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.எம்ஜிஆர் சிலை தீ பற்றி எரிந்தது அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் மற்றும் ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
44
You must be logged in to post a comment.