காட்பாடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

வேலூர் அடுத்த காட்பாடி ரங்காலாய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சமூகநலத்துறை சார்பில் 960 பயனாளிகளுக்கு ரூ 9 கோடியே 60 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளை வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார். உடன் ஆட்சியர் சண்முகசுந்தரம் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மாவட்ட அதிமுக செயலாளர் அப்பு வட்டாட்சியர் பாலமுருகன் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு அறங்காவலர் குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.