நிவர் புயல் நிவாரணம் காட்பாடி, பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் வழங்கினர்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கீரைசாத்து பகுதி மோகனின் பண்ணை கோழி 1150 வெள்ளத்தால் அழிந்தன. அதற்கான அரசின் நிவாரண தொகையை காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் 1 லட்சத்து ஆயிரத்து 500 ரூபாயை மோகனிடம் வழங்கினார். அதேப்போல் பேர்ணாம்பட்டு தாலுகாமசிகம் கிராமத்தை சேர்ந்த முனியப்பனின் 2992 வாத்துக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதற்கான அரசின் நிவாரண தொகையான 2 லட்சத்து 99 ஆயிரத்து 200 ரூபாயை குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர் வழங்கினார். உடன் வட்டாட்சியர் கோபி உள்ளார்

கே.எம்.வாரியார் வேலூர்