வேலூரில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி..3 பேர் கைது

வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஏடிஎம்மை உடைக்கும் முயற்சியில் 3 பேர் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் 3 பேரைமடக்கி பிடித்தனர். அவர்கள் சைதாப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (24) தினேஷ் குமார் (23) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்