
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா ஆரிமுத்து மோட்டுர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு ரூ 2.10 லட்சத்தில் 24 லீடுகள் பயனாளிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. பத்திரபதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு குடியிருப்பை திறந்து பயனாளிகளிடம் சாவியை ஒப்படைத்தார்.நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆட்சியர் சண்முகசுந்தரம் வட்டாட்சியர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் அப்பு ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சுபாஸ் சோளிங்கர் சின்னதுரை இளைஞர் அணி தலைவர் ராகேஷ் மற்றும் வருவாய் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தினர் , பயனாளிகள் கலந்து கொண்டனர்.
வேலூரிலிருந்து வாரியார்
You must be logged in to post a comment.