41
வேலூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு 4 திமுக மண்டல தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.நேற்று 21-ம் தேதி காட்பாடியை சேர்ந்த திமுக புஷ்பலாவன்னியராஜ் மாநகராட்சி முதலாவது மண்டல தலைவராக பொறுப்பெற்றுக்கொண்டார். அவருக்கு வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், மாமன்ற உறுப்பினர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.அதற்கு முன்னதாக மண்டல தலைவர் புஷ்பலதா காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி கும்பிட்டார். பின்பு அங்குள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக மண்டல அலுவலகம் சென்று பதவி ஏற்றார்.
You must be logged in to post a comment.