கீழக்கரை தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டம்…

கீழக்கரை தாலூகாவுக்கு உட்பட்ட VAO – Village Administrative Officer எனும் கிராம நிர்வாக அலுவலர்கள் தாலூகா அலுவலகத்தில் இன்றிலிருந்து போராட்டம் அறிவித்துள்ளனர்.

கீழக்கரை தாலுகா மொத்தம் 18 கிராம நிர்வாக அலுவலர்களை உள்ளடக்கியதாகும். இவர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் இன்று (08-01-2018) இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

பின்னர் 10ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், 18 ம் தேதியிலிருந்து தொடர்ந்து வேலை புறக்கணிப்பு போராட்டம் நடத்தவும் அறிவிப்பு செய்துள்ளனர்.