62
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு டையப்பரும், குளிர்கால போர்வையும் வழங்கினார்.இது குறித்து அவர் கூறுகையில்:முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு டையப்பரும், குளிர்கால போர்வையும் தற்போதைய நிலையில் அவசரமாக தேவைப்படுவதாக தகவல் அறிந்து எனது தனிப்பட்ட சேமிப்பில் அவற்றை வாங்கி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு வழங்கினேன்.அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக அவற்றை பெற்றுக்கொண்டது மன நிறைவாக உள்ளது என்றார்.இந்த நிகழ்வில் களப்பணியில் சமூக ஆர்வலர்கள் மாற்றம் தேடி பாலமுருகன், ஸ்ரீகாந்த், ரமேஷ்குமார், சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.