மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நாவார்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் பத்து ஏக்கருக்கு மேல் சாம்பார் வெள்ளரியை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 90 நாட்களுக்கு பிறகு வெள்ளரிக்காய் அனைத்தும் நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தமிழக அரசு கொரோனாவை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு உத்தரவிட்டுள்ளதால் வாகனங்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், 90 நாட்களில் அறுவடைசெய்ய உள்ள சாம்பார் வெள்ளரிகள் அனைத்தும் பழுக்க தொடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் கொரோனா அச்சத்தால் பறிப்பதற்கு கூலிக்கு வேலைக்கு கூட ஆட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் வேறு வழியின்றி விவசாயிகள் சாம்பார் வெள்ளரியை பறிக்காமல் செடியிலேயே பழுக்கவிட்டுள்ளனர். இதனால் ஏக்கருக்கு 10ஆயிரம் செலவு செய்த பணம் கூடு; கிடைக்காமல் போனதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் சாம்பார் வெள்ளரியை விவசாயிகள் தங்களது சாம்பார் வெள்ளரி நிலத்தில் கால்நடைகளை கட்டிவைத்து தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாம்பார் வெள்ளரியை சமையலுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்படும் பட்சத்தில் சாம்பார் வெள்ளரி பழுத்தால் அது எதுக்கும் பயன்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.