Home செய்திகள் உசிலம்பட்டி அருகே வெட்டுக்கிளியை வலைபோட்டு பிடிக்கும் வேளாண்மை துறையினர்

உசிலம்பட்டி அருகே வெட்டுக்கிளியை வலைபோட்டு பிடிக்கும் வேளாண்மை துறையினர்

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தில் சரவணன் என்பவரின் தோட்டத்தில் கால்நடை தீவனப்புல்லில் வெட்டுக்கிளி படையெடுத்தது. அதனைதொடர்ந்து அருகில் பயிரிட்டிருந்த சோளப்பயிரில் தாவிய வெட்டுகிளிகள் சுமார் அரை ஏக்கர் (50சென்ட்) பயிர்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் உதயகுமார், தலைமையில் வேளாண்மை துறை அதிகாரிகள் வெட்டுகிளி குறித்து ஆய்வு மேற்கொண்டு, இது வெளிநாட்டு வெட்டுகிளி அல்ல எனவும், இந்த வெட்டுக்கிளி விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் உசிலம்பட்டி வேளாண்மைதுறை அதிகாரி புவனேந்திரன் தலைமையிலான குழுவினர் வெட்டுக்கிளி அனைத்தையும் பிடிப்பதற்காக கொசுவலையை எடுத்து சென்று, பயிரில் சுற்றிதிரிந்த வெட்டுக்கிளிகளை பிடிப்பதற்காக கொசுவலையை பயிரைச் சுற்றி பிடித்து வெட்டுக்கிளியை விரட்டியடித்து, எப்படியாவது பிடித்து விட முயற்சி செய்தனர். ஆனால் வெட்டுக்கிளி யாருடைய விரட்டுக்கும் பயப்படாமல் இடம்மாறி சென்று கொண்டே இருந்தது. ஆ ஊ என சத்தம் போட்டுக் கொண்டே (அப்போதுதான் வெட்டுக்கிளி மாட்டுமாம்) சுமார் 5மணி நேரம் போராடி வெட்டுகிளிகளை கொசுவலைக்குள் பிடிக்க முடியாமல் தினறினர்.கடைசியில் சுமார் 30க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகளை பிடித்து போரில் வெற்றி பெற்ற மாவீரனைப் போல் பெருமிதத்துடன் பாிசோதனைக்காக எடுத்துச் சென்றனா். சென்றனர்.வெட்டுக்கிளிகள் அதிகம் தென்பட்டால் இதே போல் கொசுவலையைப் போட்டு பிடிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட விவசாயிக்கு அறிவுரை கூறிச் சௌ;றனர்.வெளிநாட்டிலும் தமிழக அரசு வேளாண்மைத் துறையிலும் வெட்டுக்கிளியை பிடிப்பதற்கு வலை போட்டு பிடிக்க வேண்டுமென்ற நடைமுறை இருந்தாலும் ஒரே இடத்தில் வலையுடன் நின்று கொண்டிருந்தால் வெட்டுக்கிளிகள் தானாக வலையில் வந்து சிக்காது என்பதை ஏனோ வேளாண்மைத் துறையினா் உணரவில்லை என்பதே உண்மை.

இந்த சம்பவத்தை பார்த்த கிராம மக்கள் ஆண்டிபட்டி வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகோல் சீட்டை தண்ணீரில் மிதக்க விட்ட விஞ்சானி அமைச்சர் செல்லூர் ராஜீவைப் போல், வெட்டுகிளியை பிடிக்க கொசுவலையை கொண்டு வந்துள்ளதாக காமெடியாக சிரித்தனர்.

உசிலை தொலை..சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com