உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் சேதமடைந்து காணப்படும் மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதற்காக பொது நிதியின் மூலம் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் காலப்போக்கில் குடிநீர் தொட்டி சேதமடைந்தது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் தொட்டியில் உள்ள அனைத்து தூண்களிலும், கட்டிடங்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இனி மழைக்காலம் என்பதால் மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குடிநீர் தொட்டி அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இது குறித்து வகுரணி பஞ்சாயத்து தலைவர் லோகராணியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை சரிசெய்யவில்லை என அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை  தொலை..சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..