உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டிலுள்ள பிஆர்சி பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாணைக்கு விரோதமாக பிடித்தம் செய்த சம்பளத்தை வழங்க வேண்டும் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வர சொல்க் கூடாது ஊரடங்கு காலத்தில் பணிபுரிந்த நாட்களுக்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சிஐடியு உள்பட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தொழிற்சங்க்தைச் சேர்ந்த பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்ப்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் துணை செயலாளர் ரவி மற்றும் சிவகுமார் ஆசைத்தம்பி முத்துப்பாண்டி செயலாளர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..