முத்தையன்பட்டி கிராமத்தில் சேதமடைந்துள்ள நிழற்குடை கட்டிடத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டி கிராமத்தில் கடந்த 5 வருடங்களாக பேருந்து நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் நிழற்குடை எப்போதும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன் சேதமடைந்துள்ளதை அகற்றி புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா