Home செய்திகள் வெளிமாநிலத்திலிருந்து உசிலம்பட்டிக்கு திரும்பிய 8 பேருக்கு கொரோனா பாதிப்பு.

வெளிமாநிலத்திலிருந்து உசிலம்பட்டிக்கு திரும்பிய 8 பேருக்கு கொரோனா பாதிப்பு.

by mohan

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லைஇந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகதியில்; வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் கல்லூரிகளில் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமை முகாமில் சுமார் 154 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.இதில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் மும்பை தாராவி பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.உடனடியாக இவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com