Home செய்திகள் கொரோனா தொற்றை காரணம் காட்டி அரசு ஊழியர்களின் சலுகைகளைப் பறித்த மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்புப் பணியில் சுகாதாரத் துறையினருடன் இணைந்து வருவாய்த் துறையினர் உள்பட பல்வேறு அரசு ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோளா தாக்கத்தினால் ஊரடங்கு நிலை உள்ளதால் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையினால் அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி ரத்து வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட சில சலுகைகளை சில மாதங்களுக்கு நிறுத்தி வைத்து அரசாணை வெளியிட்டது.இதனைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.முன்னதாக உசிலம்பட்டி அரசு பேருந்து நிலையத்தில் 5 நிமிட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com