Home செய்திகள் உசிலம்பட்டியில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது.

உசிலம்பட்டியில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது.

by mohan

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின் ஆரோக்கியத்திற்காக அரசு வைட்டமின் மாத்திரை கபசுர குடிநீர் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம். உசிலம்பட்டி நகராட்சி சார்பாக தேனி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது.உசிலம்பட்டி உசிலம்பட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் தீபா மற்றும் யோகா மருத்துவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி வழங்கினர் .இதில் நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி சுகாதார அலுவலர்கள் அகமது கபீர் .சரவண பிரபு மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுமார் 108 பேர் சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com