Home செய்திகள் குப்பணம்பட்டியில் கொரோனா தொற்று ஊருக்குள் வரவிடாமல் தடுப்பதற்காக வாசலில் தெய்வீக முறைப்படி பெண்கள் வேப்பிலையுடன் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

குப்பணம்பட்டியில் கொரோனா தொற்று ஊருக்குள் வரவிடாமல் தடுப்பதற்காக வாசலில் தெய்வீக முறைப்படி பெண்கள் வேப்பிலையுடன் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

by mohan

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்லும் நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்க தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என அரசு வலியுறுத்திவருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

வெளியுரிலிருந்து தங்கள் பகுதிக்கு வந்தவர்கள் தாங்களாகவே தனிமைபடுத்திகொணடுள்ள நிலையில் தங்கள் ஊருக்குள் கொரோனா தொற்று வரவிடாமல் அந்த பகுதி பெண்கள் தெய்வீக முறைப்படி வீட்டின் வாசல்முன்பு கொரானாவை ஒழிப்போம் என்ற வசனத்துடன் கோலமிட்டு மஞ்சள் நீரி மற்றும் வேப்பிலையை வைத்து குத்துவிளக்கேற்றி வழிபாடு செய்தனர். இது போன்று செய்தால் கொரோனா பாதிப்பு தங்களது பகுதிகளில் இருக்காது என்பது ஐதீகம் என்று அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com