Home செய்திகள் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

by mohan

உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் மற்றும் கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதற்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்ததன் பேரில் உசிலம்பட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தேவர்சிலை வளாகத்தில் மாநில விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு முன்னாள் எம்எல்ஏ பிவி கதிரவன் வழக்கறிஞர் சுரேந்திரன் வழக்கறிஞர் சங்கத்தினர் சொக்கநாதன் மூவேந்தர் முன்னேற்ற கழகம்  சுந்தரர் செல்வி ஒச்சா தேவர் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் சங்கிலி மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சியினர் 58 விவசாய சங்க தலைவர் ஜெயராஜ் நிர்வாகிகள் சிவப்பிரகாசம் உதயகுமார் ஜான்சன் தமிழ்செல்வன் மக்கள் அதிகாரம் குருசாமிதிமுக நகர செயலாளர் தங்கமலைபாண்டி கம்யூனிஸ்ட் கட்சியினர் செல்லக்கண்ணு சீர்மரபினர் நலசங்க மாநில செயலாளர் ஆதிசேடன், அமமுக சங்க வழக்கறிஞர்கள் காக்கிராஜா, பாலசந்திரன்,திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி பிரவீன், சமாஜ்வாதி பார்வர்ட் பிளாக் கட்சி மாநில செயலாளர் அல்லிக்கொடி மற்றும் இளைஞர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் உண்ணாவிரதம்  போராட்டம் நடத்தி வருகின்றனர் போராட்டத்தின் முடிவில் போலீசார் அனுமதி மறுப்பு என்பதால் ஆர்ப்பாட்டம் மற்றும் அரசியல் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com