திருவண்ணாமலை -தமிழக அரசின் நாட்டுக்கோழி குஞ்சுகளை எம்எல்ஏ வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காரப்பட்டு மற்றும் புதுப்பாளையம் உட்பட்ட கிராம மக்களுக்கு தமிழக அரசின் கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலசப்பாக்கம் , புதுப்பாளையம் மற்றும் காரப்பட்டு கிராமத்திலுள்ள பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் 500 மேல் பட்ட ஊரக புறக்கடை கோழிகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கால்நடைத் துறை மண்டல இணை இயக்குனர், மருத்துவர்கள், வழக்கறிஞர் ராதா, மாவட்ட கவுன்சிலர் தவமணி, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், கூட்டுறவு சங்கத்தலைவர் பொய்யாமொழி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..