Home செய்திகள் திருவனந்தபுரத்திற்க்கு நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா

திருவனந்தபுரத்திற்க்கு நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா

by mohan

நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் துறை சார்ந்த 56 மாணவ மாணவிகள் 24.05.22 செவ்வாய்க்கிழமை அன்று இஸ்ரோ உந்துவிசை வளாகம் மகேந்திரகிரியில் கல்வி சுற்றுலா சென்றனர். அங்கு உள்ள விண்வெளி அருங்காட்சியத்தில் இஸ்ரோ உருவான விதம், இஸ்ரேலில் உள்ள ராக்கெட்களின் மாதிரி வடிவம், செயற்கைக்கோள்கள் மாதிரி வடிவம் மற்றும் எரிபொருள்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றி தெளிவாக விளக்கப்படங்களுடன் எடுத்துரைத்தனர். மேலும் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகளில் உபயோகப்படுத்தப்படும் திரவ எரிபொருள், திட எரிபொருள் கிரியோஜெனிக் இன்ஜின் செயல்படும் விதம் போன்றவை தெளிவாக விளக்கப்பட்டது. ராக்கெட் எஞ்சின் எவ்வாறு மகேந்திரகிரியில் தயாரிக்கப்படுகிறது அந்த எஞ்சின் எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது என்பதும் விளக்கப்பட்டது.

பின்னர் ராக்கெட் என்ஜின் பரிசோதனை செய்யப்படும் பரிசோதனை நிலையம் ஒன்று, பரிசோதனை நிலையம் இரண்டு ஆகியவற்றிற்கு மாணவர்களை நேரடியாக கூட்டி சென்று எவ்வாறு பரிசோதனை செய்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்கினார். 25.05.22 புதன்கிழமை விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விண்வெளி மாதிரிகள் செயற்கைக்கோள்கள் செயற்கைக்கோள் மாதிரிகள் ராக்கெட் மாதிரிகள் போன்றவை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. விண்வெளியில் மனிதர்கள் எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை, அவர்கள் அணியும் உடைகள், விண்வெளியின் தட்பவெப்பம் குறித்த அனைத்தும் தெளிவாக விளக்கினார். மேலும் இஸ்ரோ உருவான விதம், இஸ்ரோவை உருவாக்க விக்ரம் சாராபாய் எடுத்துக்கொண்ட முயற்சி, இஸ்ரோவால் விவசாயம், தொலைத்தொடர்பு, இயற்கை பேரிடர் பாதுகாப்பு, நாட்டின் ராணுவ பாதுகாப்பு, வெளிப்புறக் கோள்கள் பற்றிய ஆராய்ச்சி எவ்வாறு வளர்ந்துள்ளது என்பது பற்றி தெளிவான விளக்க காட்சிகளுடன் விளக்கப்பட்டது. இறுதியாக ரோகிணி வகையை சேர்ந்த சவுண்டிங் ராக்கெட் மாணவர்களுக்காக செலுத்தப்பட்டு காண்பிக்கப்பட்டது. இந்த ராக்கெட் ஆனது விண்வெளியில் நிலவும் தட்பவெப்ப நிலை, வானிலை போன்றவற்றை அறிய அனுப்பப்பட்டது.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com