Home செய்திகள் பத்திரதரவா கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் பயிற்சி முகாம்

பத்திரதரவா கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் பயிற்சி முகாம்

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்திரதரவா கிராமத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் கிராம வேளாண் முன்னேற்றக் குழு என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது .இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சையது முஸ்தபா கலந்து கொண்டு தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது எப்படி என்றும் சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்வது எப்படி என்று விளக்க உரை விவசாயிகளுக்கு வழங்கினார். தவமுருகன் உதவி வேளாண்மை அலுவலர் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிக்கு முன்பாக தக்கை பூண்டு சாகுபடி செய்து மடக்கி உழுது மண்வளத்தை பாதுகாக்கலாம் எனவும், மண் பரிசோதனையின் அவசியத்தை குறித்து விளக்கம் அளித்தார். இப்பயிற்சிகான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப அலுவலர் ஜோசப் செய்திருந்தார். கிராமத்தில் உள்ள விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com