Home செய்திகள் ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய விவசாய பயிற்சி..

ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய விவசாய பயிற்சி..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.20- இராமநாதபுரம் உழவர் மையத்தில் அட்மா சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய விவசாயப் பயிற்சி நடந்தது. உயர் சாகுபடி தொழில்நுட்பம், நெல் செயல்விளக்கத்திடல்அமைத்தல், மண்புழு உரக் கூடாரம் அமைத்தல், தீவனப் பயிர் சாகுபடி செய்தல், கறவை பசுக்கள், வெள்ளாடுகள், நாட்டுக்கோழி வளர்த்தல், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணைய திட்டப் பணிகள் தொடர்பாக ராமநாதபுரம் வட்டாரத்தில் இருந்து மானாவாரி பகுதி மேம்பாடு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க தேர்வான 40 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடை வளர்ப்பு செய்வதால் ஆண்டு முழுவதும் கொட்டகை மூலம் கிடைக்கும் கழிவுகளில் அதிக இயற்கை உரம் பெறமுடியும். இத்தகைய தரமிக்க ஆட்டுக் கழிவை மண்ணில் இடுவதால் தழை, மணி, சாம்பல் உள்ளிட்ட முதன்மை சத்துகள், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம் போன்ற 2 ஆம் நிலை சத்துகளுடன் 7 வகை 3 ஆம் நிலை சத்துகள் பயிர்களுக்கு கிடைக்கும் என வேளாண் அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் வள்ளல்கண்ணன் பேசினார்.

விவசாய ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதால் விவசாயிகளின் குடும்பத்தார் அனைவருக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு, பண்ணைப் பொருள்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நில வளத்தை மேம்படுத்துதல், பயிரின் மகசூலை பெருக்குவதுடன் உரச் செலவுகளைக் குறைக்க முடியும். வரப்பு பயிர் சாகுபடி செய்தல், கால்நடைகளுக்கு தீவனப் பயிர் சாகுபடி போன்ற தொழில்நுட்பங்களை கையாளுவதால் இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம் பெறலாம் என ராமநாதபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் என்றார். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடை வளர்ப்பின் முக்கிய பங்கு, கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்து  கால்நடை அறிவியல் பல்கலை பேராசிரியர் விஜயலிங்கம்  எடுத்துரைத்தார். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பயிர் சுழற்சி முறை, ஆடு, மாடு, கோழி, மண்புழு, தேனீ வளர்ப்பு பழக்கன்றுகள் நடுதல், தீவனப் பயிர் சாகுபடி போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் ஸ்ரீதர் பேசினார். உயிர் உரங்களின் நன்மைகள் குறித்து உயிர் உர உற்பத்தி மையம் வேளாண் அலுவலர் அம்பேத்குமார்,  வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானிய விரங்கள் குறித்து  வேளாண் அலுவலர் தமிழ் எடுத்துரைத்தனர். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள், மானிய விரங்கள் குறித்து  வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை கண்காணிப்பாளர் சரவணக்குமார் எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோசலாதேவி நன்றி தெரிவித்தார். உதவி வேளாண்மை அலுவலர்கள் குணசேகரன், முத்துக்குமார், சித்திரச்செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளாகள் ராஜேஸ்குமார், பாலாஜி ஆகியோர்  பயிற்சி ஏற்பாடுகளை செய்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com