Home செய்திகள் ஆடி அமாவாசை ஜூலை 31ல் மதுரை – ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ஆடி அமாவாசை ஜூலை 31ல் மதுரை – ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

by mohan

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் 31.7.19 காலை 8:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 11:55 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.இந்த ரயில் கீழ் மதுரையில் இருந்து காலை 8:38 மணி, சிலைமானில் இருந்து காலை 8:52 மணி, திருப்புவனத்தில் இருந்து காலை 9:01 மணி, திருப்பாச்சேத்தியிலிருந்து காலை 9:11 மணி, ராஜகம்பீரத்திலிருந்து காலை 9:21 மணி, மானாமதுரையில் இருந்து காலை 9:40 மணி, பரமக்குடியில் இருந்து காலை 10:05 மணி, ராமநாதபுரத்தில் இருந்து காலை 10:32 மணி, உச்சிப்புளியில் இருந்து காலை 10:52 மணி, மண்டபத்தில் இருந்து காலை 11:05 மணி, பாம்பனிலிருந்து காலை 11:21 மணி புறப்படுகிறது. மறுமார்க்கத்தில், ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து 31.7.19 மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 7.30 மணிக்கு மதுரை செல்கிறது. இந்த ரயில் பாம்பனிலிருந்து மாலை 4:27 மணி, மண்டபத்திலிருந்து மாலை 4:45 மணி, உச்சிப்புளியில் மாலை 4.58 மணி, ராமநாதபுரத்தில் இருந்து மாலை 5:12 மணி, பரமக்குடியிலிருந்து மாலை 5:35 மணி, மானாமதுரையிலிருந்து மாலை 6:05 மணி, ராஜகம்பீரத்திலிருந்து மாலை 6:11 மணி, திருப்பாச்சேத்தியிலிருந்து மாலை6:20 மணி, திருப்புவனத்தில் இருந்து மாலை 6:32 மணி, சிலைமானிலிருந்து மாலை 6:44 மணி, கீழ் மதுரையிலிருந்து மாலை 6:56 மணி புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com