Home செய்திகள் ஏழை எளிய மக்களுக்காக கலைஞர் நடமாடும் உணவு ஆலயம் திட்டம் துவக்கம்..

ஏழை எளிய மக்களுக்காக கலைஞர் நடமாடும் உணவு ஆலயம் திட்டம் துவக்கம்..

by Askar

ஏழை எளிய மக்களுக்காக கலைஞர் நடமாடும் உணவு ஆலயம் திட்டம் துவக்கம்..

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்காக பல நிவாரண நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.தற்போது சுரண்டையில் கலைஞர் பெயரில் நடமாடும் உணவு ஆலயம் என்ற திட்டத்தினை மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாபன் துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் தினமும் கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் உணவு மற்றும் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி சுரண்டை பகுதியில் தூய்மை பணியாளர்கள், தெருவோரம் வசிப்பவர்கள், மனநிலை பாதித்தவர்கள், வறுமையில் உள்ளவர் களுக்காக சுரண்டையில் அனைத்து பகுதியை சேர்ந்தவர்கள் பயன்பெற கலைஞர் நடமாடும் உணவு ஆலய திட்டத்தை மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகச்சாமி, ஒன்றிய பிரதிநிதி சசிகுமார், வைகை கணேசன், தகவல் தொழில்நுட்ப அணி சுதன்ராஜா, மீனவரணி முத்துசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐயப்பன்,  கோமதிநாயகம், சீனி துரை, சுரேஷ் கண்ணா , பவுன்ராஜ், ராஜ்குமார், கபில், ஸ்ரீதர், மாடசாமி, கணேசன், சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்,அபுபக்கர் சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com