Home செய்திகள் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை சீரமைக்கும் பணியினால் பெரும்பாலான தார்சாலைகள் சேதம்: பொதுமக்கள் பெரும் அவதி!

பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை சீரமைக்கும் பணியினால் பெரும்பாலான தார்சாலைகள் சேதம்: பொதுமக்கள் பெரும் அவதி!

by Askar

பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை சீரமைக்கும் பணியினால் பெரும்பாலான தார்சாலைகள் சேதம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், காவல் நிலையம், நீதிமன்றம், போன்ற முக்கியமான பகுதிகளுக்கு செல்லும் வழியான செளராஸ்டிரம் சத்திரம் புதுபாலம் என்று அழைக்கபடும் பகுதியில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகமாக செல்லக்கூடிய சாலைகளில் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தார் சாலைகள் பள்ளம் மேடுமாக சேதமடைகிறது இதனால் அவ்வழியே, செல்லும் வாகனங்கள் விபத்துக்கள் ஏற்படும் வகையில் உள்ளது.

மேலும் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் உள்ளிட்ட பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

சேதமடைந்த தார் சாலைகளை சீர் செய்வதற்குரிய அரசு நிதி் இருந்தும் பெரியகுளம் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அதனை சரி செய்ய முன் வருவதில்லை.  பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு  மாவட்ட நிர்வாகம் தார் சாலைகளை சரி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்குமா? என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவன் – A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com