Home செய்திகள் தேனி மாவட்டத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சார்பாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! 

தேனி மாவட்டத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சார்பாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! 

by Askar

தேனி மாவட்டத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சார்பாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக தேனிமாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி கீழ்க்கண்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1.புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சொந்த ஊருக்குத் திரும்ப, ரயில்கள் பேருந்துகளை ஏற்பாடு செய்து உணவும் குடிநீரும் தந்து அனுப்பி வைத்திடுக!

2. ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூபாய் பத்தாயிரம் வீதம் பயணப்படி வழங்கிடுக!

3. கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்காதீர்!

4. வேலையை நூறு நாட்களுக்கும் அதிகமாக உயர்த்தி, குடும்பத்தில் உள்ள எல்லா வயதுவந்த நபர்களுக்கும் வேலை வழங்குக!

5. நகர்ப்புறங்களிலும் உறுதிசெய்யப்பட்ட வேலையும், தங்குமிடமும் வழங்குக!

6. நிபந்தனை எதுவும் இல்லாமல் ரேஷன் பொருட்களை வழங்குக!

7. தொழிலாளர் சட்டங்களை முடக்காதீர்!

8. கிராமப்புற ஏழைகள் சிறு குறு விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றுக!

9. வயது முதிர்ந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு, வாழ்க்கைச் செலவுக்கான ஓய்வூதியத்தை உறுதிப்படுத்து! சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை விரிவுபடுத்துக!

10. விவசாய விளைபோருட்கள் எடுத்துச்செல்லும் வாகனங்கள் தொழிலாளர்கள் வேலைக்குச்செல்லும் வாகனங்களை மறிப்பதை காவல்துறை நிறுத்திடவேண்டும்!

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com