
தேனிமாவட்டம், பெரியகுளம், மஞ்சளாறு அணையைச் சேர்ந்த வீரணன் மகன் ராஜா (வயது 40) என்பவர் திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் தாலுகா, அடுக்கம் ஊராட்சி சாமக் காட்டுப்பள்ளம் என்ற ஊரில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் இன்று தேனிக்குச் சென்று இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு பெரியகுளம் நோக்கி வந்த போது பின்புறமாக வந்த லாரி மோதியதில்ராஜா என்பவரின் தலை நசுங்கிசம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த தென்கரை காவல்துறையினர், உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தென்கரை காவல்துறையினரேபிரேதத்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி உடற்கூறாய்வுக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் விபத்து ஏற்படுத்திய லாரியை மடக்கிப் பிடித்த தென்கரை காவல்துறையினர் லாரியை ஓட்டி வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த செல்லத்துரை (வயது 34) என்பவரைக் கைது செய்து மேலும், விசாரணை செய்து வருகின்றனர்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.