
தமிழக துணை முதல்வர் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு கொண்டு வருகிறது . பெரியகுளம் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் ஆற்றங்கரை ஓரங்கள் ,குளங்கள் அதிகம் இருக்கும் இடங்களில் பெரும்பாலும் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர் இதனால் மின்வெட்டு காரணமாக இரவில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுவதுடன் மட்டுமல்லாமல் டெங்கு மலேரியா போன்ற வியாதிகள் ஏற்பட வழிவகுக்கிறது .சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிசம் கர்ப்பிணி பெண்களும் இரவில் தூக்கமில்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இப்பகுதி இருட்டாக காணப்படுவதால் பணம் மற்றும் நகைப்பறிப்பு , வாகனம் திருட்டு ஏற்பட வாய்ப்புள்ளது. மதுபிரியர்களும் இருட்டாக இருக்கும் இவ்விடத்தை பயன்படுத்தி மது அருந்தி விட்டு பாட்டில்களை தூக்கி எறிந்து விட்டு சென்று விடுகின்றனர். அதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுகின்றனர் இதனை கருத்திற் கொண்டு சில சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.