தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் பெருகி வரும் கொரோனோ வைரஸ் பரவலை தடுக்க தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை நிர்வாகமும் இணைந்து பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .அதன்படி தேனி மாவட்டத்தில் கம்பம் உத்தமபாளையம் போடி ஆண்டிபட்டி பெரியகுளம் சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்கப்பட்டு அங்கு கொரானோ வைரஸால் பாதிக்கப்படும் நபர்களை அனுமதிக்கப்பட்டு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து பல தாலுகாக்களில் தனியார் கல்லூரிகளில் போதுமான அளவு படுக்கை வசதி கொண்ட தனிமைப்படுத்தும் முகாம் மற்றும் சிகிச்சை முகாம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் நோய்தொற்று உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் மாவட்ட சித்த மருத்துவர் மாரியப்பன் முயற்சியால் பெரியகுளம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டி தனியார் கல்லூரியில் சித்த மருத்துவத்துக்கு என தனியாக 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை முகாம் செயல்பட தொடங்கி உள்ளது. இந்த முகாமில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அனுமதிக்கப்படும் நபர்களை குணப்படுத்துவதற்கு முற்றிலும் சித்த மருத்துவ முறையே பயன்படுத்தப்படுகிறது. இதில் நோயாளிகளுக்கு தூதுவளை. குண்டம் திப்பிலி. எலுமிச்சை இஞ்சி சாறு என்று தினமும் வழங்கப்படுகிறது. அத்துடன் அரசு உத்தரவின்படி விட்டமின் G மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் 6 செவிலியர்கள் 6 உதவியாளர்கள் 8 சமையலர்கள் என்ன 2 ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றார்கள். நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்க விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதோடு வர்மம் முத்திரை என்ற மர்மத்தை கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்த வர்மத்தின் மூலமாக தினந்தா வர்மம். கும்மிகாளம் வர்மம் .சக்தி வர்மம். அடப்ப காலம் வர்மம். சக்தி முத்திரை . பிரயான முத்திரை . சூரிய முத்திரை .சளி முத்திரை ஆகிய. வர்ம முத்திரைகள் சொல்லித் தரப்படுவதன் மூலமாக நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கப் படுகிறது.இந்த 100 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை பிரிவில் இரண்டு தினங்களில் இன்று வரை 90 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.