Home செய்திகள் தஞ்சையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

தஞ்சையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

by Baker BAker

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையைச் சார்பாக 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தவும் உயிர் காக்கும் முதலுதவி பற்றியும் விழிப்புணர்வை. திடீர் குழு பிளாஸ் மாப் நடனமாடி விளக்கமளித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியை கிளீன் தஞ்சை இயக்கத்தின் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல் தொடங்கி வைத்தார். மாலையில் பொது மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் கருவிகள் காட்சிப்படுத்தி விளக்கமளித்தனர். இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவசர ஊர்தி நிபுணர்களுக்கு பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழுடன் மரக்கன்று பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மருத்துவ சேவை வாரத்தைக் கொண்டாடும் வகையில் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு முதலுதவி உபகரணங்கள் மற்றும் கையேடு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு தஞ்சை மக்கள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குனர் டாக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கான பயிற்சி மற்றும் ஏற்பாடுகளை மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சரவணவேல் செய்திருந்தார். மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் பிரவீன் மற்றும் மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினர். அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர் ஆசிக் மீரான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!