தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள்; மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு எனது வாக்கு! எனது உரிமை! எனது கடமை! என்ற செயல்பாட்டின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் 10.03.2024 அன்று காலை 6.30 மணிக்கு மேலகரம் சமுதாய நலக்கூடத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் என அனைத்து பிரிவினர்களுக்கும் மாரத்தான் போட்டிகள் சுமார் 5 கி.மீ தூரம் வரை நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு முதற்பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் 4 முதல் 10ஆம் பரிசு வரை ரூ.1000 வழங்கப்படும். மாரத்தான் போட்டியில் முதல் பத்து இடம் பெறுவோர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவரால் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டி-சர்ட் (ம) தொப்பி வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04633 212580 மற்றும் 94891 53546 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.