Home செய்திகள் தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

by Abubakker Sithik

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடந்த போதை பொருள் ஒழிப்பு தின பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தென்காசியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி மாவட்ட எஸ்.பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்காசி புதிய பேருந்து நிலையம் மற்றும் தென்காசி கோபுர வாசல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதே போன்று, தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கும் உதவி எண்கள் 98840 42100, 94875 45177, 10581 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!