Home செய்திகள் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்; திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் துவங்கி வைத்தார்..

சாம்பவர் வடகரை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்; திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் துவங்கி வைத்தார்..

by mohan

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தொடங்கி வைத்து பேசினார். முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், கடையநல்லூர் தாசில்தார் ராம்குமார் (பொறுப்பு), செயல் அலுவலர் ராஜேஸ்வரி, பொறியாளர் கோபி, மின் செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம், பேரூர் செயலாளர் முத்து, துணைத் தலைவர் நாலாயிரம் என்ற பாப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களை போல் அரசு அதிகாரிகள் மக்களை தேடி வரும் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் 30 நாட்களில் தீர்வு காண சிறப்பு அதிகாரிகளை நியமித்து உள்ளதால் மக்கள் தங்கள் கோரிக்கைகளை ஒவ்வொரு முகாமிலும் மனுவாக வழங்கி வருகின்றனர். மக்களின் கோரிக்கைகள் சரியான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால் 30 நாட்களில் தீர்வு வழங்கப்படுகிறது என பேசினார்.மேலும் இந்த முகாமை தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பாதியில் நிற்கும் கருங்குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை மனுவை பேரூர் செயலாளர்கள், முத்து ஆகியோர் வழங்கினர்‌. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன், கவுன்சிலர்கள் பழனிக்குமார், சுடலைமுத்து, பட்டு, ஐயப்பன், ரபீக் ராஜா, இசக்கி, மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், மாணவரணி ரமேஷ், சாம்பவர் வடகரை திமுக நிர்வாகிகள், முன்னாள் பேரூர் செயலாளர் ராமச்சந்திரன், பட்டுமுத்து, சந்திரன், முத்துக்குமார், அனைந்த பெருமாள், பக்ருதீன், செல்வின் அப்பாத்துரை, பசுபதி, ஆறுமுகம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com