Home செய்திகள் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மஹா சிவராத்திரி விழா கொடி ஏற்றம்..

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மஹா சிவராத்திரி விழா கொடி ஏற்றம்..

by ஆசிரியர்

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சரியார்கள் வேதம் முழங்க மங்கள இசையுடன் இன்று (25/02/ 2019) கொடி ஏற்றப்பட்டது. இதன் பின்னர் இராமநாதசுவாமி பர்வதவர்த்தனி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. கோயில் செயல் அலுவலரும், இந்து அறநிலையத் துறை இணை ஆணையருமான மங்கையர்க்கரசி, கோயில் கட்டுமானப்பணி கோட்டப் பொறியாளர் மயில்வாகனம், கண்காணிப்பாளர் ககாரின் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

10 நாள் திருவிழாவில் 8 ஆம் நாள் (04/3/2019) இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளி ரதத்தில் காட்சி அளிக்கின்றனர். 9 ஆம் நாள் (05/3/ 2019) காலை 8: 30 மணி முதல் 9 மணிக்குள் திருத்தேரோட்டம் நடக்கிறது. 10 ஆம் நாள் மஹா சிவராத்திரி அன்று மாலை 6 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இரு வார மகா சிவராத்திரி திருவிழா 08/3/ 2019 ல் நிறைவடைகிறது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com