தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியின் 30வது ஆண்டு விழா..

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 30வது ஆண்டுவிழா இன்று(22-03-2018) மாலை 4.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஏ.இ.ஜி.சி ரஜினி ஆண்டறிக்கையை வாசித்தார். முனைவர் கே.கூடலிங்கம் மண்டல இணை இயக்குநர், கல்லூரி கல்வித்துறை, மதுரை மண்டலம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாதனைப் பெண்களாக பெண்கள் வலம் வர வேண்டும் என்றும் சாதனை ஒன்றை இலக்காகக் கொள்ள வேண்டும், சாதனையாளர்களாக மாற வேண்டும் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இக்கல்வியாணடில் தனித்திறன் செயல்பாட்டிற்காக போராசிரியிர்கள், பல துறைத் தலைவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ரொக்கமும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில் குர்ரத் ஜெமிலா புரவலர் சீதக்காதி அறக்கட்டளை மற்றும் செயலாளர் முஸ்லிம் பெண்கள் அமைப்பு மற்றும் சீதக்காதி அறக்கட்டளை உறுப்பினர் ஜீனத் அய்யூப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இவ்விழாவில் ஹெச்.மரியம் ஆதிலா மூன்றாமாண்டு நுண்ணுயிரியல் மாணவி இளங்கலை பிரிவிலும், சுல்த்தானா மர்சூக், இரண்டாம் ஆண்டு மாணவி நுண்ணுயிரியல் முதுகலைப் பிரிவிலும் சிறந்த மாணவிகளுக்கான விருதைப் பெற்றார்க்ள்.

இறுதியாக ஹெச்.மரியம் ஆதிலா மூன்றாமாண்டு நுண்ணுயிரியல் மாணவி நன்றியுரை வழங்க இனிதே விழா நிறைவுற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சேக்தாவூத்கான், சீதீக்காதி அறக்கடட்ளைத் துணை பொது மேலாளர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..